மேகதாது அணையினை கட்டுவதற்கு ஒன்றிய அரசு முயற்சி செய்தாலோ அல்லது அனுமதி கொடுத்தாலோ இதனை கண்டித்து பிரதமர் வீடு முன்பு விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என திருவாரூரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி
திருவாரூரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது… மேகதாது அணையினை கட்டுவதற்கு ஒன்றிய அரசு முயற்சி செய்தாலோ அல்லது அனுமதி கொடுத்தாலோ இதனை கண்டித்து பிரதமர் வீடு முன்பு விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். தேர்தல் நேரத்தில் விவசாயிகளை நாட்டின் முதுகெலும்பு என அரசியல் கட்சியினர் கூறும் நிலையில் தேர்தல் முடிந்த பின்னர் அடிமைகளாக நினைத்து வருகின்றனர். 60 வயது நிறைந்த விவசாயிகளுக்கு மகன் மற்றும் மகள் இருந்தாலும் அதனை கணக்கில் கொள்ளாமல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், விளைபொருள்களுக்கு இரு மடங்கு விலை நிர்ணயித்திட வேண்டும், கோதாவரி- காவிரியினை இணைத்திட வேண்டும்.
தற்போது பருத்தி சாகுபடி அதிக அளவில் நடைபெறுவதால் இந்த பருத்தி பயிருக்கு உரியவில்லை கிடைப்பதற்கு முதல்வரை சந்திக்க உள்ளோம். மேலும் திருவாரூர் சேகரை கிராமத்தில் விவசாயி செந்தில்குமார் என்பவர் அந்த பகுதியில் தனிநபர்கள் புறம்போக்கு மற்றும் வாய்க்காலை அடைத்து பிளாட் போடுவது தொடர்பாக புகார் அளித்திருந்த நிலையில் அவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
எனவே குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரை கேட்டுக் கொள்கிறோம் என அய்யாக்கண்ணு தெரிவித்தார்.