in

பசுபதிகோவில் கரும்பாயிரம் கொண்ட அய்யனார் சுவாமி ஆலயம்..

பசுபதிகோவில் கரும்பாயிரம் கொண்ட அய்யனார் சுவாமி ஆலயம்..

பாலஸ்தாபன பெருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில் கரும்பாயிரம் கொண்ட அய்யனார் சுவாமி கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோயில் மிகவும் சிதிலமடைந்து காணப்படுவதால் கோயில் புரணமைத்து அய்யனார் சுவாமி ஆலயம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பாலாலயம் வைபவம் நடைபெற்றது.

பாலாலயம் நிகழ்ச்சியை முன்னிட்டு கணேச பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் தொடங்கி இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்று ஜபம் ஹோமமும் அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹுதி கலசாபிஷேகமும் மங்கள தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பாலாலய நிகழ்ச்சியில் பசுபதிகோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்

What do you think?

தஞ்சை பெருவுடையார் கோயில் ஐப்பசி மாதம் முன்னிட்டு மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை திருவிடைமருதூர் அருகே சாத்தனூரில் திருமந்திரம் அருளிய திருமூலர் கோயிலில் திருமூலநாயனார் குருபூஜை அபிஷேக ஆராதனை