in

தேவர் ஜெயந்திக்கு தேவருக்கு பாலாபிஷேகம் இளைய மன்னர் ஆர்.ஆதித்ய சேதுபதி மகாராஜா

தேவர் ஜெயந்திக்கு தேவருக்கு பாலாபிஷேகம் இளைய மன்னர் ஆர்.ஆதித்ய சேதுபதி மகாராஜா

 

தேவர் ஜெயந்திக்கு முதல் நாளிலேயே தேவருக்கு பாலாபிஷேகம் செய்து தேவரை வணங்கிய ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆர்.ஆதித்ய சேதுபதி மகாராஜா.

வருடம் தோறும் அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வருடம் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேவர் ஜெயந்திக்கு முதல் நாளான அக்டோபர் 29ஆம் தேதி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவ பெரிய சிலைக்கு ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆர்.ஆதித்ய சேதுபதி மகாராஜா தலைமையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தேவரை பாலாபிஷேகம் செய்து வழங்கினார்கள்.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் இருந்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆர்.ஆதித்ய சேதுபதி தலைமையில் அதிர்வேட்டுகள் முழங்க மேளதாளத்துடன் பால்குடம் எடுத்து கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு ஊர்வலமாக வந்தனர்.

ஊர்வலமாக 300க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் சுமந்து வந்த பால் குடங்களில் இருந்த பாலினை தேவருக்கு அபிஷேகம் செய்து அனைவரும் தேவருக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.

அதேபோல் நாளை மதுரை கோமதிபுரத்திலிருந்து 100 வாகனங்களில் ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆதித்ய சேதுபதி தலைமையில் இளைஞர்கள் பெரியவர்கள் ஊர்வலமாக கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு பசும்பொன் சென்று பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்கள்.

பசும்பொன் வெள்ளைச்சாமி தேவர் நினைவிடம் அருகில் உள்ள அன்னதான பந்தலில் ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் குடும்பத்தார் சார்பில் 24 மணிநேர தொடர் அன்னதான விருந்து நடைபெற உள்ளது.

What do you think?

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை உள்ளெடுப்பு செய்ய வேண்டும் குத்தாலம் கல்யாணம் வலியுறுத்தல்

மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை