in ,

காஞ்சிபுரம் ஸ்ரீ நகரீஸ்வரர் ஆலயத்தில் பாலாலய கும்பாபிஷேகம் விழா

காஞ்சிபுரம் ஸ்ரீ நகரீஸ்வரர் ஆலயத்தில் பாலாலய கும்பாபிஷேகம் விழா கணபதி ஹோமத்துடன் விமர்சையாக நடைபெற்றது

காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ காஞ்சி ஆரிய வைசிய சமாஜத்திற்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீநகரீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது

இதனை முன்னிட்டு பாலாலய விழா விமர்சையாக நடைபெற்றது இதில் கணபதி ஓமம் நவகிரக ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. யாகசாலை பூஜை பூர்த்தியாகி மகாபூர்ணாவதி தீபாரதனையும் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று அனைத்து சன்னதிகளும் ஒருங்கே அமைத்து சிறப்பு பாலாலய விழா நடைபெற்றது இதனை தொடர்ந்து தீபாரதனை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது பக்தர்களுக்கு பிரசாதங்களும் அன்னதானங்களும் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் முத்துலட்சுமி.ஆய்வாளர் பிருத்திகா அறங்காவலர்கள் உதயகுமார் .பத்ரி நாராயணன். சாய் சரவணன். ஆலய அர்ச்சகர் ஆதித்ய சிவன் மற்றும் காஞ்சி ஆரிய வைசிய சமாஜ உறுப்பினர்கள் பக்தர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர் இதில் ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமியின் பேரருளை பெற்று சென்றனர்.

What do you think?

நாமக்கல் மோகனூரில் ஆவணிமாத வெள்ளிகிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்

சாலையோர வியாபாரிகளுக்கு கடன்‌ வழங்கும் திட்டம் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு…