ஆடிப்பூரத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே பட்டம் மகா மாரியம்மன் திருக்கோயிலில் பால்குட உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே பட்டம் பகுதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்ததாகும் இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் அந்த வகையில் இந்த ஆண்டு ஆடிப்பூர பெருவிழா நிகழ்வான பால்குட உற்சவம் இன்று வெகு விமர்சையாக நடந்தது.
மன்னியாற்றங்கரையிலிருந்து பால்குடங்கள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர் தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர் தொடர்ந்து விழாக்குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.