புதுச்சேரி..லாரி சங்கத்திற்கு வாக்குப்பெட்டி வைத்து தேர்தல்..
புதுச்சேரி லாரி உரிமையாளர் சங்கத்திற்கு இன்று தேர்தல் நடைபெற்றது. 1980 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் லாரி உரிமையாளர் சங்கத்திற்கு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெற்ற வருகிறது.
அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற தேர்தலில் 87 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இவர்கள் வாக்களிப்பதற்காக மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனைய அலுவலகத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு வாக்கு சீட்டு முறையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் போட்டியின்றி சங்க தலைவராக செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக குமாரகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். மற்ற பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் மாலையில் அறிவிக்கப்படும். தேர்தல் ஆணையரான தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து பொறுப்பு வகித்தார்.
செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,புதுச்சேரியின் மிகப் பழமையான சங்கத்திற்கு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை ஜனநாயக ரீதியில் வாக்குப்பெட்டி வைத்து வாக்குக்கு பதிவு நடைபெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவதாக தெரிவித்தார்.