in

கிராமிய பாடல் பாடி நாத்து நட்டு  வாக்குகள் சேகரித்த பாமக வேட்பாளர் திலகபாமா


Watch – YouTube Click

கிராமிய பாடல் பாடி நாத்து நட்டு  வாக்குகள் சேகரித்த பாமக வேட்பாளர் திலகபாமா

 

விவசாய பெண்மணியாக _ மாறி பெண் விவசாயிகளுடன் சேர்ந்து கிராமிய பாடல் பாடி நாத்து நட்டு மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த பாமக வேட்பாளர் திலகபாமா

தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து மாம்பழம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு நடத்தி வருகிறார்.

பிரச்சாரத்தில் புது புது வியூகங்கள் அமைத்து தொழிலாளர்கள், வியாபாரிகள் . விவசாயிகளுடன் இணைந்து பணி செய்தும் வாக்குகள் சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்கு உட்பட்ட ராஜக் கப்பட்டி அருகே உள்ள தம்பகுளத்து பட்டி பகுதியில் பாமக வேட்பாளர் கவிஞர் திலகபாமா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு உள்ள விவசாய நிலங்களில் பெண் விவசாயிகள் பணி செய்து வந்தனர். அப்போது பாமக வேட்பாளர் கவிஞர் திலகபாமா பெண் விவசாயிகளுடன் சேர்ந்து கிராமிய பாடல் பாடி நாத்து நட்டு விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்மணியான எனக்கு விவசாயிகளுடன் துயர் துடைக்க விவசாயிகளின் சின்னமான மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து அமோக வெற்றி பெற வேண்டும் என வாக்குகள் சேகரித்தார்.


Watch – YouTube Click

What do you think?

மதுரை எய்ம்ஸ் செங்கலை நான் எப்பொழுது தருவேன் உதயநிதி புதிய விளக்கம்

நல்லவர்களை தேர்ந்தெடுத்தால் மட்டுமே நல்ல திட்டங்கள் வரும்- வேட்பாளர் பாரிவேந்தர் பேச்சு