in

கோயில் கச்சேரிகளில் சினிமா பாடல்கள் பாட தடை

கோயில் கச்சேரிகளில் சினிமா பாடல்கள் பாட தடை

கோயில் வளாகங்களில் நடத்தப்படும் இசை கச்சேரிகலில் சினிமா பாடல்கள் பாடத்தடை.

திருவனந்தபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் சௌரிராஜன் என்பவர் ஹைகோர்ட் மனு தாக்கல் ஒன்று செய்திருந்தார். அதில் காரைக்கால் திருமலைராயன்பட்டி ..யில் உள்ள வரதராஜன் பெருமாள் கோயில் திருவிழாவின்போது கோயில் வளாகத்தில் இசை கச்சேரிகள் நடத்தப்பட்டு பொழுது அதிக அளவில் சினிமா பாடல்கள் மட்டுமே பாடப்பட்டது.

இது போன்ற நிகழ்வுகள் கோயில் வளாகத்தில் நடக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோயில் வளாகத்திற்குள் சினிமா பாடல்கள் பாடுவதையும் அந்த பாட்டுக்கு நடனம் ஆடுவதையும் ஏற்க முடியாது.

எந்த கோயில் திருவிழா ஆனாலும் கோவில் வளாகத்திற்குள் நிர்வாகிகள் ஏற்பாடு செய்த இசை கச்சேரியில் கோயில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும் சினிமா பாடல்கள் இனி பாடக்கூடாது என்று தீர்ப்பு வழங்கினார்.

What do you think?

எளிகையாக நடந்த NS பொன்குமார் திருமணம்