in

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இலவசமாக உணவு வழங்கும் தன்னார்வலர்களுக்கு தடை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இலவசமாக உணவு வழங்கும் தன்னார்வலர்களுக்கு தடை

 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இலவசமாக உணவு வழங்கும் தன்னார்வலர்களுக்கு தடை விதித்த மாவட்ட நிர்வாகம்: , மறுபரிசீலனை செய்ய ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ள தன்னார்வலர்கள்

மதுரையில் நட்சத்திர நண்பர்கள் என்னும் அமைப்பை சேர்ந்தவர்கள் பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை வைகை ஆற்றில் ஆகாயத் தாமரை சூழ்ந்து இருந்ததை தன்னார்வலர்களாக ஒன்றிணைந்து அப்புறப்படுத்தினர்.

அதேபோல மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்த அமைப்பு சார்பில் இதுவரை 174 நாட்களுக்கு மதிய உணவு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அண்மையில் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் நேற்றைய தினம் ஆய்வு மேற்கொண்டதில் மருத்துவமனைக்கு பல்வேறு விதிமுறைகளை விதித்தனர்

இந்நிலையில் இன்று வழக்கம் போல நட்சத்திர நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள், மருத்துவமனை வளாகத்திற்கு நோயாளி உடன் வந்தவர்களுக்கு உணவு வழங்க வந்தனர். அப்போது, மருத்துவமனை பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து புதிய விதிமுறைகளை எடுத்துரைத்து வெளியேற்றியுள்ளனர்.

இதனால் மருத்துவமனையில் உணவை எதிர்பார்த்து காத்திருந்த நபர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இது குறித்து நட்சத்திர நண்பர்கள் அமைப்பின் தலைவர் ஸ்டார் குரு கூறுகையில்.

எங்களால் முடிந்த பல்வேறு சமூக நலபணிகளை மதுரையில் முன்னெடுத்து செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதி தான் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இலவசமாக மதிய உணவு வழங்கி வசந்த் நிலையில் புதிய விதிமுறைகளால் நாங்கள் உணவு வழங்குவதற்கு தடை ஏற்பட்டுள்ளது,

இதனால் எங்கள் உணவை எதிர்பார்த்து மருத்துவமனை வளாகத்தில் உள்ளவர்கள் பெரும் அவதிக்குள்ளா கின்றனர். மருத்துவமனை பொறுப்பு முதல்வர் தர்மராஜ் தான் இது குறித்து கேட்டதற்கு அவர் ஆட்சியரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார் ஆட்சியரிடம் நேரில் சென்று கேட்டதற்கு நீங்கள் ரோட்டில் ஒரு ஓரமாக உணவை வழங்குமாறு கூறுகிறார்.

சாலையில் உணவினை வழங்குவதால் அதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
அதோடு இலவசமாக உணவு வழங்கப்படுவதால் கூட்டம் கூடி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறும் ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கும் தடை ஏற்படும்.

எனவே ஆட்சியர் எங்களுக்கு மருத்துவமனை வளாகத்தில் ஏதாவது ஒரு சிறிய இடம் உணவு வழங்குவதற்கு ஏற்படுத்தி கொடுத்தால் பெரும் புண்ணியமாக இருக்கும். வறுமையில் தவிக்கும் மக்கள் தான் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர் அவர்களுக்கு இலவசமாக வழங்கும் இந்த உணவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

What do you think?

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான இலவச செயற்கை கால் உபகரணங்கள் வழங்கும் முகாம்

புதிய பேருந்து நிலையம் செல்லூர் கிராமத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு