in ,

திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழாவின் முதல் நிகழ்வாக பந்த கால் முகூர்த்தம்

திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழாவின் முதல் நிகழ்வாக பந்த கால் முகூர்த்தம்

 

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை திருத்தலத்தில் திருகார்த்திகை தீப திருவிழாவின் முதல் நிகழ்வாக பந்த கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் உலக பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுவது வழக்கம் அந்த திருவிழா வரும் டிசம்பர் மாதம் நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் மாதம் 13ஆம் தேதி கோவிலின் கருவறையில் அதிகாலையில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதனுடைய முதல் நிகழ்வாக பந்த கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது.

இதற்காக இன்று அதிகாலை கோயிலில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து சம்பந்த விநாயகர் சன்னதியில் ஸ்தபண பூஜையும் பின்னர் பந்த காலுக்கு சம்பந்த விநாயகர் கோவிலின் முன்பு அபிஷே ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க பந்தக்கால் ராஜகோபரத்திற்கு முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கன்னியா லக்னத்தில் பந்தக்கால் நடப்பட்டு பந்த கால் முகூர்த்தம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கார்த்திகை தீப திருவிழாவின் பூர் வாங்கப் பணிகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெறும்.

பந்த கால் முகூர்த்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருக்கோயில் இணை ஆணையர் ஜோதி அண்ணாமலையார் ஆலயத்தின் அறங்காவலர்கள் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் சிவனடியார்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

What do you think?

எனக்கு குழந்தை…யா கற்பனையே பயமாக இருக்கிறது

நல்லா இருந்த குடும்பத்தை கெடுத்துட்டியே….யம்மா…. கெனிஷா பிரான்சிஸ்…சை திட்டி தீர்க்கும் இணைய வாசிகள்