காரைக்கால் அம்மையார் ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி
உலக பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜை பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரும், சிவ பெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட உலக பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் 17ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற 04.05. 2025 ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு யாகசாலை பூஜை பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக பந்தகாலுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் போன்ற பல்வேறு திரவிப்பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு மகா தீபாராதனை செய்யப்பட்டு யாகசாலை அமைக்க உள்ள இடத்தில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனை அடுத்து காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் வருகின்ற 04.05.25 ஆம் தேதி நடைபெற உள்ள காரைக்கால் அம்மையார் ஆலயம் கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்த கும்பாபிஷேக விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.