பாசிக், பாப்ஸ்கோ, ஊழியர்கள் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம்
பாசிக், பாப்ஸ்கோ, ஊழியர்கள், நிலுவை சம்பளம் கேட்டும், நிறுவனத்தை தொடர்ந்து நடத்த வலியுறுத்தி சட்டமன்றத்தை முற்றுகையிட்டு ஏஐடியூசி சார்பில் போராட்டம். காவல்துறையின் தடுப்புகளை தள்ள முயற்சித்ததால் சிறிது நேரம் சலசலப்பு.
புதுச்சேரி கூட்டுறவு நிறுவனமான பாப்ஸ்கோ, பாசிக், நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு ஆண்டு கணக்கில் சம்பளம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது.
பாப்ஸ்கோ நிறுவனத்தில் உள்ள ஆயிரம் ஊழியர்களுக்கு 75 மாத சம்பளமும் பாசிக் நிறுவனத்தில் உள்ள 500 ஊழியர்களுக்கு 138 சம்பளமும் வழங்கப்படாமல் இருந்து வருகிறது.
இதனால் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி, கடலில் இறங்கியும், தலைகீழாக நின்றும், வயிற்றில் ஈரத் துணியை அணிந்து கொண்டும், தொடர்ந்து பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இருந்த போதும் அரசு இவர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு முன்வராமல் அலட்சியம் செய்து வருகிறது. முதலமைச்சர், மற்றும் துறையின் அமைச்சர்கள் இடத்திலும் கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது, முதலமைச்சரும் அமைச்சர்களும் உருப்படியான எந்த முடிவும் எடுக்காமல் ஊழியர்களை உதாசீனப்படுத்தி வருகிறார்கள்.
என். ஆர், பி.ஜே.பி கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் அமைந்த உடன் நிலுவை சம்பளம் அளித்து மூடி கிடக்கும் அரசு சார்பு நிறுவனங்களை திறந்து செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்கள். மூன்றாண்டுகள் ஆட்சி பூர்த்தி செய்யும் நிலையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இன்றைய தினம் பாப்ஸ்கோ, பாசிக் ஊழியர்கள் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அரசு இனியும் காலம் கடத்தாமல் நாளை நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பாப்ஸ்கோ, பாசிக் நிறுவனங்கள் சம்பந்தமாக ஊழியர்களை பாதிக்காத வகையில் நல்ல முடிவினை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்திற்கு ஏஐடியுசி மாநிலபொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.
ஊழியர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பாலாஜி திரையரங்கம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நேரு வீதி மிஷின் வீதி வழியாக சென்று சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
அப்பொழுது போலீசார் தலைப்புகளை அமைத்து தனித்து நிறுத்தினர் இதனால் போராட்டக்காரர்கள் தடுப்பு கட்டைகளை தள்ளும் முயற்சி ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு காணப்பட்டது அதனைத் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…