in

குற்றாலத்தில் எட்டு நாட்களுக்குப் பின்னர் குளிக்க அனுமதி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு


Watch – YouTube Click

குற்றாலத்தில் எட்டு நாட்களுக்குப் பின்னர் குளிக்க அனுமதி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

கடந்த 17ஆம் தேதி பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட காட்டாட்டு வெள்ளப்பெருக்கினை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் எட்டு நாட்களுக்குப் பின்னர் குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் விடுமுறை தினமான இன்று அனைத்து குற்றால அருவிகளிலும் குளிக்க அனுமதி… சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கடந்த 17ஆம் தேதி பழைய குற்றால அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் பலியானதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அனைத்து குற்றால அருவிகளிலும் சுற்றுலா பணிகள் குளிக்க தடை விதித்தார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் தடையை விலக்கிக் கொண்ட நிலையில் மெயின் அருவியில் மட்டும் பராமரிப்பு பணி காரணமாகவும் அவ்வப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்ந்தது.

எட்டு நாட்கள் தொடர் தடைக்கு பின்னர் மெயின் அருவியிள் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 17ஆம் தேதி காட்டாற்று வெள்ளப்பெருக்கு பின்பு இன்று குற்றால அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், புலியருவி, ஐந்தருவி சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் முதல் முறையாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதான அருமையான மெயின் அருவியில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது மேலும் தற்போது விடுமுறை தினம் என்பதால் அனைத்து குற்றால அருவிகளுக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மெயின் அருவி பகுதியில் தற்போது ஆண்கள் குளிக்கச் செல்லும் பகுதியில் டைல்ஸ் கற்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக பெண்கள் குளிக்க செல்லும் வழியில் தடுப்புகள் அமைத்து ஆண்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கையாக அருவியின் மேற்பகுதியில் ஆற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கை உணர்த்தும் கருவிகள் பொருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்ட நடவடிக்கையாக மெயின் அருவி கரையில் தீயணைப்பு துறை சார்பில் பாதுகாப்பு மிதவைகள் மற்றும் அருவி கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது குளிக்கும் அபாய சங்கு பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் அருவி பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் சூழ்நிலைக்கேற்ப குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தொடர்பாக அவரது மனைவி மகன்கள், மகள் ஆகியோரிடம் விசாரணை

கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களை நோட்டமிட்டு தொடர் திருட்டில் ஈடுபடும் கள்வன்