பெண் துப்புரவாளர்களுக்கு தானாக முன்வந்து கவுரவித்த பெல்ஜியம் நாட்டு சுற்றுலா பயணிகள்
மகளிர் தினத்தை ஒட்டி பெண் துப்புரவாளர்களுக்கு மரியாதை செலுத்திய சமூக ஆர்வலர்…தானாக முன்வந்து கவுரவித்த பெல்ஜியம் நாட்டு சுற்றுலா பயணிகள்..
உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதுச்சேரியில் நள்ளிரவு முதல் அதிகாலை பணியில் ஈடுபடும் துப்புரவாளர்களுக்கு புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கத் தலைவரும் சமூக ஆர்வலமான நாராயணசாமி கடற்கரை சாலையில் கௌரவிக்கு விதமாக சால்வை அணிவித்து காலை உணவு வழங்கினார்.
அப்போது புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெல்ஜியம் நாட்டின் சுற்றுலாப் பயணிகள் இதனை ஆர்வத்துடன் பார்த்தனர்.
தாங்களாகவே முன்வந்து துப்புரவாளர்களுக்கு சால்வை அறிவிப்பதாக கூறி அவர்கள் அணிவித்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தவுடன் அவர்கள் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர் …