சித்தார் பட்டியில் பகவதி அம்மன் கோவில் திருவிழா தேவராட்டத்துடன் சுவாமி அழைத்து வரும் நிகழ்ச்சி
ஆண்டிபட்டி அருகே சித்தார் பட்டியில் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தேவராட்டத்துடன் சுவாமி அழைத்து வரும் நிகழ்ச்சியில் நடைபெற்றது.
ஆண்டிபட்டி அருகே சித்தார்பட்டியில் மிகவும் பழமை வாய்ந்த முத்தாலம்மன் பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் வருடம்தோறும் திருவிழா நடத்துவது வழக்கம் .
இந்நிலையில் இந்த வருடத்தின் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தில் இருந்து சித்தார்பட்டி ஊர் பெரிய தனம் சுவாமி வீட்டிற்கு பகவதி அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி வான வேடிக்கையுடனும் தேவராட்டத்துடன் அழைத்து வரும் நிகழ்ச்சியில் நடைபெற்றது.
தொடர்ந்து ஊர் பெரிய தனம் வீட்டில் இருந்து முத்தாலம்மன் பகவதி அம்மன் சன்னதிக்கு பகவதி அம்மன் பக்தி பாடல்கள் ஒலிக்க தேவராட்டத்துடன் வான வேடிக்கையுடன் சிறப்பான முறையில் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.