விரைவில் முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி சீரியல்
இல்லத்தரசிகளின் ஃபேவரிட் சீரியலான பாக்கியலட்சுமி சீரியல் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது.
விஜய் டிவி…யில் ஒளிப்பரபாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா மற்றும் கோபி இருவருக்கும் விவாகரத்தாகி, ராதிகா கோபியின் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
இதனை பார்க்கும் பொழுது பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் சுசித்ரா தற்பொழுது புது தொடரில் கமிட் ஆகி இருக்கிறார்.
சிந்து பைரவி என்ற கன்னடா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் ஆடுகளம் என்ற சீரியலின் கன்னட ரீமேக் தான் சிந்து பைரவி.