லிம்கா புக்ஸ் ஆஃப் ரெகார்ட் மற்றும் USA வேர்ல்ட் ரெக்கார்ட் ஆகியவற்றில் இடம் பெற கிரிவலப்பாதையில் பரதநாட்டியம்
உலக நன்மைக்காகவும் மக்கள் நலமோடு வாழவும் நாட்டில் அமைதி நிலவ வேண்டியும் லிம்கா புக்ஸ் ஆஃப் ரெகார்ட் மற்றும் USA வேர்ல்ட் ரெக்கார்ட் ஆகியவற்றில் இடம் பெற கிரிவலப்பாதையில் பரதநாட்டியம் மற்றும் கோலாட்டம் ஆடி உலக சாதனை முயற்சி செய்த நாட்டிய கலைஞர்கள்…
உலக நன்மைக்காகவும், மக்கள் நலமோடு வாழவும் நாட்டில் அமைதி நிலவ வேண்டியும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் விநாயகர் முருகர் சிவன் பார்வதி வேடமணிந்து பக்தி பாடல்களுக்கு கோலாட்டம் மற்றும் பரதநாட்டியம் ஆடி 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து வழிபாடு.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபாடு செய்கின்றனர்.
இந்நிலையில் உலக நன்மைக்காகவும் மக்கள் நோய் நொடி இன்றி வாழவும் நாட்டில் அமைதி நிலவ வேண்டியும் இன்று திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப்பாதையில் ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த சாய் டிரஸ்ட் மற்றும் மானசா கலா சேத்ரா பள்ளியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விநாயகர் முருகர் சிவன் பார்வதி வேடமணிந்து பல்வேறு பக்தி பாடல்களுக்கு கோலாட்டம் மற்றும் பரதநாட்டியம் ஆடியவாறு 15 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதை சுற்றி வந்து அண்ணாமலையாரை வழிபட்டு லிம்கா வேர்ல்ட் ரெக்கார்ட் மற்றும் யுஎஸ்ஏ வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற வேண்டி மாணவிகள் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பக்தி பாடல்களுக்கு கோலாட்டம் மட்டும் பரதநாட்டியம் ஆடி கிரிவலம் மேற்கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.