புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்
கடலூர் மாவட்டம் புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் புவனகிரி பேருந்து நிலையம் அருகாமையில் நடைபெற்றது
சிறப்பு விருந்தினராக மாநில துணைத்தலைவரும் சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் பங்கேற்று உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்து உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டையை வழங்கினார் பின்னர் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள கடைக்கு நேரடியாக சென்று புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்
இதனை அடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது
மது ஒழிப்பு மாநாடு குறித்து கேட்டதற்கு,மது ஒழிப்பில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்.அது அவர்களுக்கு பிடிக்கவில்லை.மது ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் மது ஆலை உற்பத்தியாளர்களை அழைத்துச் சென்று மது ஒழிப்பு மாநாடு நடத்த உள்ளார்கள். பாமக மது ஒழிப்பில் தீவிரமாக இருப்பதால் அதற்கு எதிராக இதை செய்கிறார்கள்.
திருப்பதி லட்டு பிரச்சனை நடந்து இருந்தால் மிகப்பெரிய குற்றம். பக்தர்கள் மனதில் ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனை கண்டறிந்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து ஆம்ஸ்ட்ராங் கொலையில் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிந்துபாத் கதை போல் தொடர்ந்து கொண்டே உள்ளது. பிடிக்கப் பிடிக்க பின்னணியாக வந்து கொண்டே உள்ளார்கள். உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்து இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது ஒவ்வொரு ஆளாக பிடிக்கப்பட்டு என்கவுண்டர் செய்து வருகின்றனர். இன்னும் சரியான நடவடிக்கை தேவை என பேசினார்