பவதாரணியின் இறுதி ஆசை விரைவில் நிறைவேறும் … பவதாரிணியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் ….இளையராஜா
சென்ற வருடம் ஜனவரி 25ஆம் தேதி இளையராஜாவின் மகள் பவதாரணி புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.
அவரது திதி நாளும் பிறந்த நாளும் ஒரே நாளில் அமைந்ததால் அவரது குடும்பத்தினர் பவதாரணிக்கு இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.
பிப்ரவரி 12 அன்று, அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளை நினைவுகூரும் நிகழ்வு நடைபெற்றது. இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்ட குடும்பத்தினருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, பவதாரிணியின் கடைசி ஆசை பெண்கள் ஆர்கெஸ்ட்ரா குழுவை நிறுவுவது. இந்த ஆர்கெஸ்ட்ரா 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கானது.
மேலும் உலகில் எங்கிருந்தும் பங்கேற்பாளர்கள் சேரலாம். ஆர்கெஸ்ட்ராவில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என அவர் அறிவித்துள்ளார்.
இசையில் தான் கவனம் செலுத்தியதால், குழந்தைகளை கவனிக்க தவறிவிட்டதாக இளையராஜா கூறியுள்ளார். “என் குழந்தைகளை நான் கவனிக்கத் தவறியது இப்போது எனக்கு வேதனை அளிக்கிறது. இந்த வலியை இசை மூலம் போக்கி கொள்கிறேன்.
இசை நிகழ்ச்சியில் பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாடல் பாடும் போது பாவதாரினியின் அண்ணனும் இசையமைப்பாளரும் ஆன கார்த்திக்ராஜா மனமடைந்து கதறி அழுதார்.
இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் கார்த்திக் ராஜாவை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு இது எல்லாம் இப்பொழுது நடக்கக்கூடிய விஷயங்கள் இல்லை.
பவா…..எங்களை விட்டுவிட்டு இவ்வளவு சீக்கிரம் போவாள் என நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை கடந்த ஆண்டு கோட் படத்தில் பவா….வின் குரலில் ஒரு பாடல் பாடப்பட்டது அதற்குள் பவா இறந்து விட்டால் என்று வருத்தத்துடன் கூறினார்.