in

புதிய படித்துறை அமைக்க பூமி பூஜை


Watch – YouTube Click

புதிய படித்துறை அமைக்க பூமி பூஜை

 

காசிக்கு வீசும் பெற்ற அருள்மிகு கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் 3.10 கோடி ரூபாய் செலவில் புதிய படித்துறை அமைக்கும் கட்டுமான பணியை பூமி பூஜை செய்து வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

புதுவை, வில்லியனூர் திருக்காஞ்சியில் ஆண்டுதோறும் நடக்கும் மாசிமக திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கூடி இங்குள்ள பழைய படித்துறை வழியாக இறங்கி மிகவும் பிரசித்தி பெற்ற சங்கராபரணி ஆற்றில் வழிபட்டு நீராடியும் செல்வார்கள்.

இந்த ஆற்றில் நீராடுவது மற்றும் தர்பணம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.

இந்த நிகழ்வு வடக்கில் உள்ள காசிக்கு செல்வதற்கு ஈடானது என நம்பப்படுகிறது.தற்போது உள்ள படித்துறை மிகவும் பழுதடைத்து உள்ளது.

ஆகையால் சங்கராபரணி ஆற்றின் வலது கரையில் உள்ள படித்துறையை மேம்படுத்தும் பொருட்டு வேளாண்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அறிவுறுத்தலின் படி பக்கதர்களுக்கு ஏற்ற வசதியுடன் கூடிய படித்துறையானது 75 மீட்டார் நீளம் மற்றும் 26.10 மீட்டர் அகலத்துடள் அமைப்பதற்கு பொதுப்பணித்துறை மூலம் ரூபாய் 3.10 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.

படித்துறையானது ஆற்றின் கரையோரம் கருங்கல் படிக்கட்டுகள் மற்றும் சில்வர் கைப்பிடியுடன் எளிதாக ஆற்றில் இறங்கி நீராடும் வகையில் பக்கதர்களுக்கான வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.

மேலும் படித்துறையில் கோபுரத்துடன் கூடிய நான்கு தனி பார்வையாளர் மடம் மற்றும் பூஜைகள் மேற்கொள்ள இடங்களும் அமைக்கப் படஉள்ளது.

இந்த நிலையில் இதற்கான துவக்க விழா காலை நடந்தது. இதில் தொகுதி எம்எல்ஏவும் வேளாண் துறை அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து படித்துறை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தலைமை பொறியாளர், வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர் , செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் உதவிபொறியாளர் செல்வராசு இளநிலை பொறியாளர் ஸ்ரீநாத் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

திருக்குறள் மாணவர் மாநாடு 2024

திமுக கூட்டணியில் கமல்