in

மீண்டும் ஜெயம் ரவியுடன் பூமிகா


Watch – YouTube Click

மீண்டும் ஜெயம் ரவியுடன் பூமிகா

 

ஒரு காலத்தில் பிரபல கதாநாயகியாக இருந்த பூமிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்பவும் தமிழில் நடித்திருக்கிறார்.

ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக பூமிகா நடித்திருக்கிறார். இப்படம் குறித்து அவர் கூறியதாவது நீ எவ்வளவு வெற்றி அடைந்தாலும் வீட்டிற்கு திரும்பும் பொழுது வீட்டில் உன்னுடைய குழந்தைகள் சகோதரர்கள் உறவினர்கள் இருப்பார்கள் அவர்களை பார்க்கும் போது கிடைக்கும் சந்தோஷத்தை விட வேறு எதுவும் இல்லை.

அதைப் போல தான் இந்த படத்தில் நான் ஜெயம் ரவிக்கு அக்காவா நடித்திருக்கிறேன். அவருடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் சந்தோஷம் நான் தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் ஏழு படங்களில் நடித்திருக்கிறேன்.

ஒவ்வொரு படத்திலும் எனக்கு கிடைத்த கதாபாத்திரம் மிகவும் அழுத்தமானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருந்தது மீண்டும் நடிக்க வரும்போது கதாநாயகியாக இருந்த நான் அக்கா கேரக்டரில் நடிப்பதா என்று தயங்கினேன் ஆனால் இந்த படத்தின் கதை எனக்கு பிடித்ததால் ஜெயம் ரவிக்கு அக்காவாக இந்த படத்தில் நடித்திருக்கிறேன்.


Watch – YouTube Click

What do you think?

ஆஸ்கர் விருது….க்கு செல்லும் லாபதா லேடிஸ் திரைப்படம்

கின்னஸ் சாதனை படைத்த நடிகர் சிரஞ்சீவி