அறிஞர் அண்ணாவிண் பிறந்தநாளை முன்னிட்டு மிதிவண்டி போட்டி. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார்
தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவிண் பிறந்தநாளை முன்னிட்டு மிதிவண்டி போட்டி. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம்,ஆறுபாதி மற்றும் செம்பனார்கோயிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மிதிவண்டி போட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
முதலில் ஆறுபாதியிலிருந்தும் பின்னர் செம்பனார்கோயில் காவல் நிலையத்திலிருந்தும், சிறுவர், பெரியவர் மகளீர் என தனித்தனியாக மிதிவண்டி போட்டியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மற்றும் ஒன்றிய தலைவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள்,அரசு அதிகாரிகளும், மாணவ மாணவிகளும் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.