in ,

செஞ்சி ராஜா தேசிங்கு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.

செஞ்சி ராஜா தேசிங்கு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தலைமையில்

செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலிமஸ்தான் ஆகியோர் முன்னிலையில் திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் சிவசுப்பிரமணி அனைவரையும் வரவேற்பில் நடைபெற்ற
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுருப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செஞ்சி, மற்றும் மேல்மலையனூர் தாலுகாவில் உள்ள 29-அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல் நிலை பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 3378 மாணவ மாணவிகளுக்கு 1 கோடியே 63 லட்சத்தி 5ஆயிரத்து 520 ரூபாய் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்:

தாய் உள்ளத்தோடு ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவருக்கு காலை சிற்றுண்டி திட்டம்,பெண்கள் உயர் கல்வி படிப்பை தொடர்வதற்கு புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்து இன்று தமிழ்நாடு முதலமைச்சர் பாரதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 9-ஆம்தேதி கோவையில் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளார்.

மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் மாணவர்களிடத்தில் ஏரி குளம் கிணறு ஆகிய பகுதிகளில் செல்ல வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் கடந்த மூன்று ஆண்டு காலமாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

தற்போது இந்த சேர்க்கை விகிதம் மேலும் அதிகரித்துள்ளது இது மட்டும் இல்லாமல் மேலும் இடைநிற்றல் பள்ளி மாணவர்களை கண்டறிந்து அவர்களையும் பள்ளிக்கு வருவதற்கான முன்னெடுப்புகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில்பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, நகர செயலாளர் கார்த்திக்,மாவட்டமுதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள், திண்டிவனம் பள்ளிக்கல்வி ஆய்வாளர் விநாயகமூர்த்தி.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் மாணிக்கம், திலகவதி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இருபால் ஆசிரியர் பெருமக்கள்,மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரசா தேசிங்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி நன்றி கூறினார்.

What do you think?

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடிமாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

கொள்ளிடம் ஆற்றின் கரையோர வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர் கரையிலேயே காத்து கிடக்கும் பொதுமக்கள்