in

பிக் பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் நீதிபதி மகனுடன் சண்டை

பிக் பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் நீதிபதி மகனுடன் சண்டை

 

பிக் பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் நீதிபதி மகனுடன் சண்டை.

தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கூகுள் குட்டப்பா மற்றும் நாடு ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் எப்பொழுதும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டே இருப்பார் அண்மையில் நடிகை சனம் ஷெட்டி யை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக இவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தற்பொழுது மீண்டும் ஒரு வம்பில் மாட்டி இருக்கிறார் இவரது வீட்டின் அருகே குடியிருக்கும் நீதிபதியின் மகன் ஆத்திச்சூடி உடன் அடிதடியில் ஈடுபட்டு இருக்கிறார்.

இது குறித்து தர்ஷன் வெளியிட்ட பதிவில் நான் ஜிம் போயிட்டு வந்த போது என் வீட்டு வாசலில் நீதிமதியின் மகனுடைய கார் நின்றது அவர்களிடம் காரை எடுக்க சொன்னோம் நீ பிக் பாஸ்க்கு போயிட்டு வந்தா பெரிய ஆளா, அப்படின்னு மரியாதை குறைவாக என்னையும் என் தம்பியையும் பேசினர்.

அந்த வீட்டில் இருக்கும் பெண் ஒருவர் குடித்துக் கொண்டிருந்த காபியை என் தம்பியின் மீது ஊற்றினார் அவரின் கணவரும் என் தம்பியை சரமாரியாக தாக்கினர் ஒரு அண்ணனா என்னால பார்த்துக் கொண்டிருக்க முடியாததால் நான் போய் தடுத்தேன் என்னையும் அவர்கள் தாக்கினர்.

மேலும் நான் நீதிபதியின் மகன் உன்னை என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று என்னை மிரட்டினார். இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதியின் மகன் ஆத்திச்சூடி கூறுகையில் நாங்கள் வண்டியை எடுக்கிறோம் என்று கூறினோம்.

ஆனால் அவர்கள் தான் மரியாதை குறைவாக எங்களிடம் பேசினர் என் மனைவியின் கையைப் பிடித்து முறுக்கினார்கள் தர்ஷன் போதையில் இருந்தார் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சுமத்தி கொண்டிருக்கையில் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் ஆத்திச்சூடி புகார் அளித்திருக்கிறார் விசாரணைக்கு பிறகு யார் மேல் குற்றம் என்று தெரியவரும்.

What do you think?

 Good Bad Ugly ட்ரெய்லர் குறித்த அப்டேட்

பிரபல நடிகர் மறைவு