பிக் பாஸ் விக்ரமன், பெண் வேடமிட்டபடி இரவில் அடாவடி
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் Runner...ரான விக்ரமன் அண்மையில் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்தார்.
இவர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இரவு நேரத்தில் பெண் வேடம்இட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை தொந்தரவு செய்வதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரமன் இரவு நேரத்தில் பெண் வேடமிட்டு அங்கு இருப்பவர்களிடம் பாலியல் தொல்லை செய்ததாக செய்திகள் வெளியானதையடுத்து விக்ரமன் மனைவி அதற்கான விளக்கத்தையும் அளித்து காவல் நிலையத்தில் புகாரையும் கொடுத்துள்ளார்.
நாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சூட் சம்பந்தமாக எடுக்கப்பட்ட அந்த காட்சிதான் சமூக வலைதளத்தில் வெளியானது. நான் வெளியூரில் சென்று இருப்பதால் இந்த சம்பவம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது நான் எடுக்க வேண்டிய அந்த வீடியோவை இவரிடம் எடுக்க சொன்னதால் எனக்காக திருநங்கை வேடமிட்டு வீடியோ எடுத்திருக்கிறார்.
ஆனால் இந்த சம்பவம் நடந்து’ ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது இந்த சம்பவத்தை பரபரப்பாகி இருப்பது ஏன் என்று தெரியவில்லை . இது சம்பந்தமாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறேன்.