in

பிக் பாஸ் விக்ரமன் உதவி இயக்குனரை திருமணம் செய்தார்


Watch – YouTube Click

பிக் பாஸ் விக்ரமன் உதவி இயக்குனரை திருமணம் செய்தார்

விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமான விக்ரமன் அதன்பிறகு ஒரு விண்ணைத்தாண்டி வருவாயா , இ எம் ஐ, போன்ற சீரியல்களில் நடித்தார் தொகுப்பாளர், நடிகர் மட்டும் அல்ல விடுதலை சிறுத்தை கட்சியின் பேச்சாளர் மற்றும் ஜர்னலிஸ்ட் .இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் runner..ஆக அசீமிடம் டைட்டில்..லை நழுவ விட்டார்.

இவருக்கும் உதவி இயக்குனர் பிரீத்தி ..இக்கும் நேற்று சிம்பலாக திருமணம் நடைபெற்றது. இது குறித்து விக்ரமன் வெளியிட்டுள்ள பதிவில் மனைவி பிரீத்தி பார்த்திபன் சாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறார். கோடிட்ட இடங்கள், கதை திரைக்கதை வசனம் ஆகிய படங்ககளில் பார்த்திபனோடு இணைந்து பணிபுரிந்தவர். இவருக்கும் எனக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் ஏற்பட்டது எங்களுக்குள் நல்ல புரிதல் இருப்பதை உணர்ந்த நாங்கள் திருமணம் செய்ய முடிவெடுத்தோம் திருமணத்திற்கு இரு வீட்டாரின் சம்பந்தமும் வேண்டுமென்று நினைத்து இருவர் வீட்டிலும் பேசி புரிய வைத்து திருமணத்திற்கு சம்பந்தம் வாங்கியுள்ளோம்.

அவர்களின் ஆசீர்வாதத்தோடு கிழக்கு கடற்கரை சாலையில் உள் resort…டில் எங்களுக்கு திருமணம் நடந்தது. தாலி கட்ட வேண்டும் என்று பிரீத்தி விருப்பப்பட்டதாலும் பெரியவர்களின் விருப்பத்திற்காகவும் நான் தாலி கட்டினேன். பிறகு கிறிஸ்துவ முறைப்படி நாங்கள் மோதிரம் மாற்றிக் கொண்டோம் .பிரீத்தி உதவி இயக்குனர் மட்டுமல்ல முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தனுக்கு பேத்தி முறையில் சொந்தம். இவர்களுடைய திருமணத்திற்கு சீன ராமசாமி, கரு பழனியப்பன், மற்றும், ரக்ஷித்தா, ஷிவின், திருநங்கை நமிதா, ஆகியோர் கலந்து கொண்டு வாழ்தினர். விரைவில் வரவேற்பு நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

இயக்குனர் மீது மஞ்சு வாரியர் போலீசில் புகார்

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 05-11-2024