in

சாலை பாதுகாப்பு வார விழாவை ஒட்டி, இருசக்கர வாகன பேரணி

சாலை பாதுகாப்பு வார விழாவை ஒட்டி, இருசக்கர வாகன பேரணி

 

சாலை பாதுகாப்பு வார விழாவை ஒட்டி, இருசக்கர வாகன பேரணி மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை ஒட்டி இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது உலகிலேயே இந்தியாவில் தான் வாகன விபத்து இறப்பு அதிகளவில் நடைபெறுகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 60 வாகன விபத்து சாவுகள் ஏற்பட்டுள்ளது என்றும், வாகனத்தில் செல்லும்போது அலைபேசியை பயன்படுத்தக்கூடாது என்றும் பேசினார்.

இந்த பேரணி மயிலாடுதுறை நகர் முழுவதும் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வட்டார போக்குவரத்து அதிகாரி இராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

What do you think?

நீலாம்பரி ஆட்டம் ஆரம்பம்

மயிலாடுதுறையில் தேமுதிக சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்