திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய பிரகாரத்தில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் உண்டியல் வருவாய் முதல் நாள் எண்ணப்பட்ட வகையில் 3 கோடியே 92 லட்சத்து 69 ஆயிரத்து 120 ரூபாய் மற்றும் தங்கம்:230 கிராம் வெள்ளி 1 கிலோ 140 கிராம் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டது
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் இன்று மூன்றாம் பிரகாரத்தில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் கடந்த இரண்டு வருடங்களாக ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்களின் வருகை அதிகரித்த நிலையில் உண்டியல் காணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அண்ணாமலையார் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக அண்ணாமலையார் ஆலயம் மற்றும் கிரிவலப் பாதை கோசாலை என 115 உண்டியல்கள் வைக்கப்பட்ட நிலையில் இன்று அண்ணாமலையார் ஆலயம் மற்றும் கோசாலை உண்டியல்களில் இருந்து பெறப்பட்ட காணிக்கைகளை இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் மாதம் 27ம் தேதி வரை 35 நாட்களில் உண்டியல்களில் வசூலான காணிக்கைகள் சிவனடியார்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களால் எண்ணப்பட்டது.
இந்நிலையில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை
3,92,69,120 ரூபாயும் மற்றும் தங்கம் 230 கிராம் வெள்ளி 1 கிலோ 140 கிராம் வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவைகள் பக்தர்களால் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தப்பட்டது. மீதமுள்ள 78 உண்டியல்களின் காணிக்கை நாளை எண்ணப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உண்டியல் எண்ணும் பணியில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இணை ஆணையர் ஜோதி அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.