மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் பிரியாணி திருவிழா
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் பிரியாணி திருவிழா. பிரியாணியும் கொடுத்து, பரிசும் மழையும் பொழிந்த ஆயிஷா அம்மா ஆட்டுக்கிடாய் பிரியாணி அமைப்பினர்.
மதுரையைச் சேர்ந்த சித்திக் என்பவர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆட்டுப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவர் பல ஆண்டுகளாக சில்லறையாகவும், மொத்தமாகவும் ஆடுகளை கறியாக விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய புது முயற்சியாக பிரியாணி நிறுவனம் தொடங்க முடிவு செய்து தனது திறமையும் தரத்தையும் பொதுமக்களுக்கு வெளிக்கொண்டு வரும் வகையில் பிரியாணி திருவிழா என ஏற்பாடு செய்து மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இன்று ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கி பரிசு மழையும் வழங்கியுள்ளார்.
இதற்காக கடந்த 10 நாட்களாக முன்பதிவு செய்பவர்களுக்கு குழுக்கள் முறையில் நான்கு பிரிவுகளின் கீழ் பரிசு வழங்க ஏற்பாடு செய்து ஆறு நபர்கள் சாப்பிடும் பக்கெட் பிரியாணி ரூபாய்
1,800 ரூபாய்க்கு நிர்ணயம் செய்து பொதுமக்களுக்கு வழங்கிட நூதனமான முறையில் விளம்பரம் செய்துள்ளார்.
அதன் பேரில் 10 நாட்களுக்கு மேலாக முன்பதிவுகள் பெறப்பட்டு சுமார் 3000 நபர்கள் வரை மதுரை தேனி திண்டுக்கல் சேலம் கரூர் நாமக்கல் ராமநாதபுரம் விருதுநகர் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் முன்பதிவு செய்து இன்று நடைபெற்ற பிரியாணி திருவிழாவில் கலந்துகொண்டு பிரியாணியை பெற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற குழுக்கள் போட்டியில் வருகை தந்திருந்த பொது மக்களின் ரசீதுகள் அனைத்தும் ஒரு அண்டாவில் போடப்பட்டு குழந்தைகளை வைத்து பொதுமக்கள் முன்னிலையில் குழுக்கள் தேர்வு நடைபெற்று முதல் பரிசாக சுசுகி பெர்க்மன் இருசக்கர வாகனமும் இரண்டாம் பரிசாக நான்கு நபர்களுக்கு அழைப்போம் தங்க செயினும் மூன்றாம் பரிசாக பத்து நபர்களுக்கு சாம்சங் செல்போனும் நான்காம் பரிசாக 20 நபர்களுக்கு ஒரு கிராம் தங்க காயினும் வழங்கப்பட்டது.
இதில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் பரிசுகள் பெற்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்பியது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.