in

நாமக்கல் எருனமபட்டி அருகே ஓலைப்பிடாரி அம்மனுக்கு பிஸ்கட் அலங்காரம் பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் எருனமபட்டி அருகே ஓலைப்பிடாரி அம்மனுக்கு பிஸ்கட் அலங்காரம் பக்தர்கள் தரிசனம்

 

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையம் ஏரிக்கரையில், சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீஅங்காளம்மன் கோவிலுக்கு அருகில் எலுவம்பட்டி அருள்மிகு ஓலைப்பிடாரியம்மன் திருக்கோயிலில் உள்ளது.

இந்த கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பிஸ்கட் பாக்கெட்டுகளைக் கொண்டு பிஸ்கட் அலங்காரம் நடைபெற்றது.

பிஸ்கட் அலங்காரம் தொடர்ந்து மூன்று நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருந்தது நேற்று நிறைவு நாளை முன்னிட்டு மூலவர் ஓலை பிடாரி அம்மனுக்கு உதிரி பூக்களால் அர்ச்சனை செய்த பின் பல்வேறு தீப உபசரிப்புடன் மகாதீபம் காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். இந்த பிஸ்கட் அலங்காரம் இன்று (செப்டம்பர் -18) புதன்கிழமை முழுவதும் இருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த பிஸ்கட் பாக்கெட்களை நாமக்கல் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இந்த பிஸ்கட் அலங்கார அம்மனை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வியப்புடன் பார்த்து தரிசனம் செய்தனர். இந்த பிஸ்கட் அலங்காரத்தை கோயில் பூசாரி சரவணன், ரஞ்சித் முத்துசாமி அருண் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

What do you think?

திருத்துறைப்பூண்டியில் உண்ணாவிரதம் பி ஆர் பாண்டியன் அறிவிப்பு

மானூரில் அருள்மிகு தலைவாசல் கருப்பணசாமி கோயில் உற்சவ திருவிழா