ஜாபர் சாதிக்கிற்கு ஆதரவாக பாஜக வழக்கறிஞர் தலைவர் பால்கனகராஜ் வாதிட்டார்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஏற்பாட்டில் குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமசந்திரன், தங்கம் தென்னரசு , சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பின்னர் கூட்டத்தில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், துரை வைகோ அரசியலுக்கு கொண்டு வந்து கெடுத்தது நான் தான்.அவர் தற்பொழுது அரசியல் முழு நேர ஊழியர் ஆகிவிட்டார்.
வைகோவிடம் உங்களுக்கு பின்பு இந்த கட்சியை வழிநடத்த இந்த கட்சி இருப்பதற்கு ஒரு ஆள் தேவை.அதற்கு துரை வைக்க பொருத்தமானவர் அவரை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என என கூறினோம். சட்டமன்ற தேர்தலில் சாத்தூரில் துரை வைகோவை போட்டியிட வைக்க வேண்டுமென நானும் அமைச்சர் தங்கம் தென்னரசும் கூறினோம் எப்படியோ தப்பித்து விட்டார்.
அரசியலில் துரை வைகோ நிற்க வேண்டும். இந்தியா முழுவதும் வாரிசு அரசியல் இல்லாமல் எந்த கட்சியும் இல்லை. அனைத்து கட்சியிலும் வாரிசு அரசியல் உண்டு அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.குறிப்பிட்ட நபர்கள் தான் தியாகம் செய்வார்கள் அதில வைகோவும் ஒன்று.
நிகழ்ச்சி முடிந்த பின்பு செய்தியாளருக்கு பேட்டி அளித்த துரை வைகோ ,
பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மனக்கசப்புகள் இருந்தாலும் மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்றி விடக்கூடாது என்பதற்காக 7 ஆண்டுகளுக்கு முன்பு திமுக கூட்டணியில் சேர்ந்து தற்பொழுதும் பயணம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மக்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருந்தது. அதேபோல இந்த முறையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை என்ன சிறப்பு என்றால் கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த முறை தனி சின்னத்தில் போட்டியிடுகிறோம். இன்னும் 15 மாதங்கள் கால அவகாசம் இருப்பதால் மாநிலங்களவை பதவி தருகிறோம் என திமுக தெரிவித்துள்ளது.
மதிமுகவினர் நான் விருதுநகர், திருச்சி, மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் போட்டியிட வேண்டும் என விரும்புகிறார்கள்.எந்த தொகுதி என்பது கட்சி தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். நான் போட்டியிடுவது குறித்து தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும்.
போதைப் பொருள் கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் வளர்ந்த வண்ணமாக தான் உள்ளது. போதைப் பொருள் கடத்தல் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை.
கடந்த அதிமுக ஆட்சியில 2013 நவம்பர் 11ஆம் தேதி 40 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் ஜாபர் சாதிக்கிடம் பிடிபட்டு கைது செய்யப்பாட்டார். தரவுகளும் சாட்சிகளும் சரியில்லாததால் அவர் விடுதலை ஆகிவிட்டார். சரியாக அவர்கள் செய்திருந்தால் தற்போகு ஜாபர் சாதிக் வெளியில் வந்திருக்க மாட்டார். அப்போது ஜாபர் சாதிக்கிற்கு ஆதரவாக பாஜக வழக்கறிஞர் தலைவர் பால்கனகராஜ் வாதிட்டார். இது குறித்து பேச அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் அருகதை இல்லை.
14 மாதங்களுக்கு முன்பாகவே சிவகாசியில் குறுங்காடுகள் தொடங்குவதற்கு நான் முயற்சி எடுத்தேன். எந்த அரசியலுக்காகவும் நான் இந்த முயற்சியை எடுக்கவில்லை. விருதுநகர் தொகுதியில் நான் நிற்கவில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தெரிவித்துவிட்டேன்.