in

போலி கையெழுத்து போட்டு 18 ஏக்கர் நிலத்தை ரூ19 கோடிக்கு விற்க முயன்ற பாஜக விவசாய அணி நிர்வாகி கைது

போலி கையெழுத்து போட்டு 18 ஏக்கர் நிலத்தை ரூ19 கோடிக்கு விற்க முயன்ற பாஜக விவசாய அணி நிர்வாகி கைது – சிறைவாசம்

ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரம் பகுதியில் 18 ஏக்கர் பரப்பளவில் தென்னை நாற்றங்கால் உள்ளது. அரசு ஏற்கனவே இதில் விவசாயிகளுக்கு தென்னை நாற்றங்காலை கொடுத்து வந்தது. இந்த 18 ஏக்கரின் உரிமையாளர் ரங்கசாமி.இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள பாஜக விவசாய அணி மாநில நிர்வாகி கோவிந்தனுக்கு குத்தகைக்கு விட்டிருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு இடத்தின் உரிமையாளர் ரெங்கசாமி கையெழுத்தை கோவிந்தன் போலியாக கையொப்பமிட்டு ஆவணங்கள் தயாரித்து தேவராஜன் என்பவருக்கு 19 கோடி ரூபாய்க்கு விலை பேசி ஒப்பந்தம் போட்டு உள்ளார். அதற்கு முன்பணமாக 5 கோடி ரூபாய் கோவிந்தன் வாங்கி உள்ளார். வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை இடத்தையும் இவரால் பதிவு செய்து தர முடியாத நிலையில் தேவராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தேவநாதன் திருச்சி மாநகர குற்ற பிரிவு-2ல் புகார் அளித்ததன் அடிப்படையில் கோவிந்தனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னர் கோவிந்தனை ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

What do you think?

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது 58வது பிறந்தநாள்

கும்பகோணம் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசுவதற்குள் சர்ச்சை