பா.ஜ.க மற்றும் த.வெ.கயினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி
அண்ணல் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளை முன்னிட்டு, பா.ஜ.க மற்றும் த.வெ.கயினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செய்தனர்.
மயிலாடு துறை மாவட்டம் மயிலாடுதுறை காமராஜர் சாலையில் அமைந்துள்ளது அன்னல் அம்பேத்கர் உருவ சிலை. அன்னல் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் நாஞ்சில் பாலு தலைமையில் நெல்லிக்காய் மற்றும் தாமரை பூவினால் ஆண மாலை அணிவித்து மலரஞ்சலி செய்தனர்.
இதில் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் K.ராஜேந்திரன், பா.ஜ.க மாவட்ட துணை செயலாளர் மோடி கண்ணன் உட்பட ஏராளமான பா.ஜ.க,வினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அது போல் தமிழக வெற்றி கழகம் சார்பில மாவட்ட செயலாளர் குட்டி கோபி தலைமையில் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
இதில் நகர செயலாளர் ராஜ்குமார் உட்பட ஏராளமான த.வெ.க. வினர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்கள்.