கரூரில் எம்எல்ஏ சரஸ்வதி உடன் பிரச்சாரத்திற்கு சென்ற பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் வெங்கமேடு மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வாக்கு சேகரிப்பு.
கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் இன்று மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரச்சார நிகழ்ச்சியில் வேட்பாளர் செந்தில் நாதனுடன் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி பங்கேற்று என்.எஸ்.கே நகர் பகுதி பொதுமக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.
அப்போது வெங்கமேடு மார்க்கெட் பகுதியில் பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த அம்சங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மேலும், அங்குள்ள காய்கறி கடை ஒன்றில் எம்.எல்.ஏ சரஸ்வதியுடன் இணைந்து பொதுமக்களுக்கு காய்கறிகள் வியாபாரம் செய்து தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.