in

பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் – உதயநிதிக்கு பதில்


Watch – YouTube Click

புதுச்சேரி…உதயநிதிக்கு நமச்சிவாயம் பதில்

கட்சி மாறிகளை ஏன் திமுகவில் சேர்கிறார்கள்..செந்தில் பாலாஜியை ஏன் சேர்த்தீர்கள்..நான் கட்சி மாறியது புதுச்சேரியின் நன்மைக்காக தான்.தமிழக அமைச்சர் உதயநிதி புகாருக்கு புதுச்சேரி பாஜக வேட்பாளரும் உள் துறை அமைச்சருமான நமச்சிவாயம் பேட்டி…

புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,நான் எம்பியாக தேர்வு செய்யப்பட்டால் புதுச்சேரிக்கு தேவையான நிதியை பாராளுமன்றத்தில் வாதாடி கொண்டுவர பாடுபடுவேன். மாநில அந்தஸ்து பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்பி பிரதமரோடு பேசி கொண்டுவர அனைத்து முயற்சியையும் எடுப்பேன் என்றார்.

பலமுறை கட்சி மாறியவர் என தன்னை விமர்சிக்கும் தமிழக அமைச்சர் உதயநிதி,
கட்சி மாறிகளை ஏன் திமுகவில் சேர்கிறார்கள்..செந்தில் பாலாஜியை ஏன் சேர்த்தீர்கள்..நான் கட்சி மாறியது புதுச்சேரியின் நன்மைக்காக தான்.
சுயநலத்துக்காக அல்ல என பதிலடி கொடுத்தார்.

தனது சொத்து கணக்கை முறையாக நிருபித்துள்ளதாக கூறிய நமச்சிவாயம்,தனக்கு ஆயிரம் கோடி சொத்து இருப்பதாக கூறும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி வழக்கமாக பொய் சொல்வார்.அவர் டுமீல் நாராயணசாமி என நமச்சிவாயம் விமர்சித்தார்.3 லட்சம் வாக்கு
வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என கூறும் வைத்திலிங்கம்
அடுத்தவர்களை சீவி விடுவதில் கில்லாடி. புதுச்சேரியில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அனைவருமே தாங்கள்தான் வெற்றி பெறுவார்கள் என நம்புகின்றனர். புதுச்சேரியில் பாஜக வெற்றி பெறுவது உறுதி.
எதிர்கட்சி வேட்பாளர் டெபாசிட் இழப்பார் என கூறிய நமச்சிவாயம்,
புதுச்சேரிக்கு பிரதமர் மோடி பிரச்சாரத்துக்கு வருகிறார்.விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

சாலை ஓரம் உள்ள வியாபாரிகளுக்கு மருத்துவம் பார்த்து வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி சொகுசு பேருந்து லாரி மீது மோதி விபத்து