நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையை தீவிரப் படுத்தி உள்ளனர் அந்த வகையில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் எம்ஜிஆரின் பாடல்கள் ஒலிக்கவிட்டு தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து வேட்பு மனுக்கள் பரிசீலனையும் முடிவடைந்துள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தி உள்ளனர் அந்த வகையில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நைனார் நாகேந்திரன் தனது தேர்தல் பரப்புரையை இன்று முதல் தொடங்கியிருக்கிறார் அந்த வகையில் திருநெல்வேலியில் டவுன் ஈசான விநாயகர் கோவில் வழிபாடுகளை மேற்கொண்டு பின்பு தொடங்கினார் மேலதாளம் கட்சியினரின் முழக்கங்கள் என ஆரவாரத்துடன் இன்று தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியவர் திருநெல்வேலி டவுன் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து வாக்கு சேகரித்தார்.
பாரதிய ஜனதா கட்சி அனைவருக்கும் பொதுவானது என்றும் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலைப்பாட்டோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும் என்று கூறி வாக்குகளை சேகரித்தார். தேர்தல் பரப்புரையின் போது தான் முன்பு பயணித்த அதிமுக கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் பாடல்களை ஒலித்துக் கொண்டே தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். முன்னதாக தேர்தல் பரப்புரையில் எம்ஜிஆர் படத்துடன் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளுவேன் என்று அவர் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது