பரப்புரையில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பேச்சு
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர் வேட்பாளர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் இன்று விருதுநகரின் அய்யனார் நகர் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்பொழுது பேசிய வேட்பாளர் ராதிகா சரத்குமார் பேசுகையில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ராதிகா சரத்குமார் அவர்கள், பேசுகையில்
விருதுநகர் பகுதி முழுவதும் குறிப்பாக சுகாதார சீர்கேடாக உள்ளதாகவும், சுகாதார சீர்கேட்டால் குழந்தைகள் பெற்றோர்கள் உடல்நிலை பாதிக்கும் நிலை உள்ளதாகவும், இந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வெற்றி பெற வைத்தால் செய்து தரப்படும் எனவும் பொதுமக்களிடையே உறுதி மொழி அளித்தார்.
தாமரை மலர்ந்தால் இந்த விருதுநகரும் மலரும் என்றும், மேலும் தமிழ் நாட்டை இரண்டு திராவிட கட்சிகளும் ஆட்சி செய்து அழித்து விட்டார்கள் என்றும்
ஆகவே என்னை தங்கையாக, தோழியாக, சித்தியாக நினைத்து எனக்கு ஒரு முறை வாய்ப்பளித்து எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுக்க எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று பொதுமக்களிடையே பேசினார்
மேலும் பேசிய சரத்குமார் அவர்கள் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகிய இந்த நாட்டில் ஆட்சி செய்த இரு திராவிட கட்சிகளும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து தரவில்லை யென்றும், இந்தி நிலைமை மாற வேண்டும் என்றால் பொதுமக்களாகிய நாமதான் முதலில் மாற வேண்டும் கடைசி நேரத்தில் பொதுமக்களுக்கு பணம் கொடுத்தால் நமக்கு வாக்களித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை நாம் தான் தகர்க்க வேண்டும், நாளைய நாம் சந்திதியினர் நல்லா இருக்க வேண்டும் என்றால் நாம் முதலில் நல்ல முடிவு எடுக்க வேண்டும், ஒட்டு விற்பனைக்கு அல்ல என்பதை திராவிட கட்சிகள் உணர்ந்தால் நம் நாட்டிற்கு நல்லது நடக்கும் என்றும் அந்த காலம் நமக்கு வந்து கொண்டிருக்கிறது என்றும்
மீண்டும் பாரத பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவதற்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து ராதிகா சரத்குமாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பொதுமக்களிடையே பேசினார்
மேலும் தொண்டர் கொடுத்த மலர் மாலையை சரத்குமார் அவர்கள் ராதிகா சரத்குமாருக்கு பொதுமக்கள் முன்னிலையில் அணிவித்தார்.
மேலும் அய்யனார் நகர் பகுதியில் நேற்று தீப்பிடித்து எரிந்த 7 குடிசை வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்ட் டவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இறுதியாக சரத்குமார் அவர்கள் தொண்டர் ஒருவரிடம் செல்பி புகைப்படத்தை எடுத்து கொண்டார்.