புதுச்சேரியில் காங்கிரஸ் துண்டை அணிந்து கொண்டு காங்கிரஸ் பிரமுகர் வாக்களிக்க வந்ததால் பரபரப்பு
பாஜக-காங்கிரஸ் நிர்வாகிகள், கடும் வாக்குவாதம்-மோதல்,
போலீசார் விரட்டியடிப்பு
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் ராஜ் பவன் தகுதி பிரமுகராக இருப்பவர் விக்னேஷ் கண்ணன், இவர் இன்று புதுச்சேரி வைசியால் வீதியில் உள்ள சுசிலா பாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஆதரவாளர்களுடன் வாக்களிக்க சென்றார்.அப்போது அவர் கழுத்தில் காங்கிரஸ் கட்சியின் துண்டை அணிந்து கொண்டு வாக்கு செலுத்தி விட்டு வெளியே வந்தார்.அப்போது அங்கிருந்த அதே தொகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் கணபதி என்பவர் விக்னேஷ் கண்ணனுடன் எதற்காக காங்கிரஸ் துண்டை அணிந்து கொண்டு வாக்களித்தீர்கள் என்று கேட்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போதே இரு தரப்பினரும் கடுமையாக பேசிக் கொண்டிருக்கும் போது இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்,இதனால் வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு நிலவியது.இதனை அடுத்து போலீசார் இரு தரப்பினையும் சமாதானப்படுத்தினர் ஆனால் மீண்டும் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரிய கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் வாக்கு சாவடி அருகே இருந்த இரு தரப்பினரையும் விரட்டி அடித்தார் இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சுசிலா பாய் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி பிங்க் வாக்கிச்சாவடி என்பதால் அனைத்து ஊழியர்களுமே பெண்களாக இருந்தனர், மேலும் ரகலையில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர் விக்னேஷ் கண்ணன் என்பவர் மறைந்த முன்னாள் சபாநாயகர் கண்ணனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.