in

பாகுபாடான உயர் ஜாதி அரசியலை பாஜக செய்கிறது விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேச்சு


Watch – YouTube Click

எட்டு முறை வெற்றி பெற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரை விட, ஏழு முறை வெற்றி பெற்ற பிராமணரை இடைக்கால சபாநாயகர் ஆக்கியுள்ளார்கள்.

சீனியாரிட்டி மற்றும் மெரிட் இரண்டையும் விடுத்து பாகுபாடான உயர் ஜாதி அரசியலை பாஜக செய்கிறது. விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேச்சு

மக்களவையில் இடைக்கால சபாநாயகர் குறித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது

மக்களவையில் இடைக்கால சபாநாயகர் நியமித்திருக்கிறார்கள். மோடியின் அரசு மாறவில்லை என்பது இதில் தெளிவாக தெரிகிறது.

எட்டு முறை வெற்றி பெற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த கொடிகுனில் சுரேஷ் அவர்களைவிட ஏழு முறை வெற்றி பெற்றுள்ள பிராமண நாடாளுமன்ற உறுப்பினரான மேதாப் அவர்களை பாஜக இடைக்கால சபாநாயகராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

இதில் சில கேள்விகள் உள்ளது எதற்காக சீனியாரிட்டி மற்றும் மெரிட் இரண்டையும் விடுத்து பாகுபாடான உயர் ஜாதி அரசியலை பாஜக செய்கிறது., பாஜக எப்போதுமே தலித் சமூகத்துக்கு கொடுக்கின்ற அங்கீகாரத்தை கொடுப்பதில்லை.

அதுவும் குறிப்பாக அவர் மாற்றுக் கட்சியில் இருந்தால் அவரை ஏளனம் செய்வதும், அவருக்கு வாய்ப்பளிக்காமல் இருப்பது பாஜக, ஆர்.எஸ்.எஸ். இன் பழக்கமாக உள்ளது. இதை இந்த முறையும் நடத்தி இருக்கிறார்கள் இதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.


Watch – YouTube Click

What do you think?

செயல்பாடு அற்ற ஆட்சி உதாரணமாகவே கள்ளக்குறிச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

ஆட்சியை மாற்ற பிறந்தவரே என விஜய் பிறந்தநாளையொட்டி தவெகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்