in

பாஜக ஒரு போதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் எதிரானது அல்ல பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் விளக்கம்

புதுச்சேரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சந்திர பிரியங்காவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு அமைச்சரான சாய். சரவணன் குமாரின் இலக்காவும் பறிக்கப்பட்டுள்ளது குறித்து முதலமைச்சர் விளக்க வேண்டும்

பாஜக ஒரு போதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் எதிரானது அல்ல பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் விளக்கம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் கவர்னர் உரை மீதான நன்றி தெரிவித்து பேசும்போது குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய். சரவணன் குமார் இலக்காக பறிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய அவர் இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி பதில் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்….

பாஜக என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் விரோதமான கட்சி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வருவதாக தெரிவித்தார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு அமைச்சரின் இலாகா பறிக்கப்பட்டு வேறு ஒரு அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது இது சம்பந்தமாக முதலமைச்சர் விளக்க வேண்டும் என்றார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நியாய விலை கடைகள் மூலம் எந்த ஒரு பொருளும் வழங்காமல் இருந்தார்கள். தொடர்ந்து பாஜக கூட்டணி எம்எல்ஏக்கள் வலியுறுத்தியத்தின் பேரில் புதுச்சேரியில் ரேஷன் கடைகளை மீண்டும் திறக்க துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நிலையில் அமைச்சரின் இலாகா மாற்றப்பட்டுள்ளது இது எங்களுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்ட கல்யாணசுந்தரம்

அமைச்சர் சாய். சரவணன் குமாரிடமிருந்து பறிக்கப்பட்ட இலாக்காவை மீண்டும் அவருக்கே வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் தற்போது அமைச்சர் சாய். சரவணகுமாரின் இலாக்கா பறிக்கப்பட்டுள்ளது.இதற்கும் பாஜகவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தார்.

அமைச்சரின் இலாக்கா பறிப்பு குறித்து முதல்வர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம், அவர் பதில் அளிக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கையூட்டு பெற்றுக் கொண்டு அதிகாரிகள் ரேஷன் கார்டுகள் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது அதிகாரிகள் அவர்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் கல்யாணசுந்தரம் கூறினார்.

What do you think?

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து அவசியம் முதல்வர் ரங்கசாமி பரபரப்பு பேச்சு

வயநாட்டை மீட்டு எடுங்கள் … மம்முட்டி வேண்டுகோள்