பெரம்பலூரில் டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவு திரட்டி பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்
பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர் அவர்களுக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆதரவு திரட்டி பிரச்சாரம் செய்தார்.அப்போது பேசிய அவர்,
பாரிவேந்தரின் கனவான பெரம்பலூர் ரயில் திட்டம் கண்டிப்பாக கொண்டுவரப்படும் அதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
நேர்மையால் உண்மையால் மக்கள் சிந்தனையால் உழைத்து முன்னுக்கு வந்தவர் பாரிவேந்தர். அவர் சம்பாதித்த பணத்தை தொகுதிமக்களுக்கு செலவழித்து வருகிறார்.
இம்முறை பாரிவேந்தர் வெற்றிபெற்றால் 1500 குடும்பங்களுக்கு இலவச சிகிச்சை கொடுக்கும் பொறுப்பை ஏற்க உள்ளார். மோடி குஜராத் முதல்வராக இருந்த போது அவரை முதன்முதலாக தமிழகத்திற்கு அழைத்து வந்தவர் பாரிவேந்தர்.
பாரிவேந்தருக்காக பிரதமர் மோடி பெரம்பலூர் வர வாய்ப்புள்ளது.
தாமரை சின்னத்தில் நிற்கும் பாரிவேந்தர் வெற்றிக்காக ஒவ்வொரு பாஜக நிர்வாகியும் தொண்டனும் அடுத்த 20 நாளைக்கு உயிரைக்கொடுத்து வேலைபார்க்கவேண்டும்
பெண்களை அவமானப்படுத்தும் திமுகவின் வேட்பாளர்கள் நமக்குவேண்டாம்.
உண்மையான மனிதர் டாக்டர் பாரிவேந்தரை வெற்றிபெறச்செய்வது நமது கடமை.இவ்வாறு அண்ணாமலை பேசினார்.