தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் பா.ஜ.க வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் பா.ஜ.க வினர் பா.ஜ.க அலுவலகத்தில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி மாவட் துணை செயலாளர் அலுவலகத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், தமிழக முதல்வர் மு..க.ஸ்டாலினை கண்டித்தும் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. மாவட்ட துணை செயலாளர் மோடி கண்ணன் தலைமையில் பா.ஜ.க வினர் திரண்டு கருப்பு கொடி ஏந்தி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், பொய் பிரச்சாரங்களை கண்டித்தும் டாஸ்மார்கில் நடைபெறுகிற ஊழலை கண்டித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் முழக்கமிட்டனர்.
பின் அலுவலகத்தின் உள்ளே ஸ்டாலின் படத்தில் என்னங்க அப்பா இப்படி விடிச்சிருச்சி என்கிற படங்களை ஏந்தி கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிகழ்வில் உள்ளாட்சி மேம்பாட்டு மாநில செயலாளர் ஸ்ரீதர், நகரத் தலைவர் ராஜகோபால், நகர பொதுச் செயலாளர் மணிமேகலை, ஜெயப்பிரியா, செல்வகுமார், ராமு, முரளி, விஜயலட்சுமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.