திருப்பரங்குன்றம் கோவில் மலை பிரச்சனை குத்தாலத்தில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் இன்று மயிலாடுதுறை மத்திய மற்றும் குத்தாலம் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் திடீர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு குத்தாலம் மேற்கு ஒன்றிய தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.இதில் பங்கேற்ற பாஜகவினர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோவில் மலை பிரச்சனை தொடர்பாக முருகன் கோவில் மலையை மீட்க வேண்டும், திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம், வெற்றிவேல் வீரவேல், பாரத் மாதா கி ஜே உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய ஒன்றிய பொது செயலாளர் கணேசன், நகர தலைவர் ரமேஷ், பொருளாளர் ராஜ்குமார், வர்த்தக ஒன்றிய செயலாளர் ராகவன் பிரிவு தலைவர் தண்டபாணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.