சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் மனம் உருகி பிரார்த்தனையில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: செல்பி மோகத்தில் இருந்த குழந்தைகளுக்கு ஆலய பிரசாதத்தை வழங்கி அறிவுரை.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் உள்ள கோவில்களில் ஆன்மீக சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் இன்று நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் நவநீதீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார்
. முன்னதாக சிக்கல் வந்த அவருக்கு மாவட்ட பாஜக சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிக்கல் சிங்காரவேலர் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார். அங்கு பாரத பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் ஆயுல் விருத்தி வேண்டி வழிபாடு செய்தார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த பெண்கள் குழந்தைகள் அண்ணாமலையுடன் போட்டி போட்டு செல்பி எடுத்துக் கொண்டனர். கோயிலை வலம் வரும்போது சிறுவன் செல்பி எடுத்ததை தடுத்து ஆலயத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது ஆலயம் தரிசன நேரங்களில் தரிசனத்தை செய்ய வேண்டும். பிறகு தங்களுக்கு செல்பி எடுக்கலாம் என அறிவுரை வழங்கினார்.
இறுதியாக சுவாமி தரிசனத்தை முடித்த அண்ணாமலை அங்கிருந்த குழந்தைகளை அழைத்து அவருக்கு ஆலயத்திலிருந்து வழங்கிய பிரசாதங்களை பிரித்து ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் வழங்கி குழந்தைகளுக்கு ஆசி வழங்கி மகிழ்ந்தார்.