in

பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைதுக்கு கண்டனம் தெரிவித்தார்

பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைதுக்கு கண்டனம் தெரிவித்தார்

 

நடிகர் விஜய் முதல்ல தனது கொள்கை என்னன்னு சொல்ல வேண்டும்; எம்ஜிஆர், விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது தங்களது கொள்கையை சொன்னார்கள்; பிராமணர்கள் மட்டும் பூனூல் அணிவதில்லை வன்னியர்கள் கூட பூநூல் அணிகிறார்கள் பூநூலை அறுக்க போய் அடி வாங்கி விடாதீர்கள்; நாகையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் பேட்டி

பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் நாகூர் பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கில் ஆஜர் ஆவதற்காக நாகை நீதிமன்றத்திற்கு இன்று வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைதுக்கு கண்டனம் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் விஜய் ஒரு நடிகர்தான் எனவும் எம்ஜிஆர், விஜயகாந்த் போல் தங்களது கொள்கை அறிவிக்க வேண்டும் எனவும் சும்மா 4 லெட்டர் பேடுகளை வெளியிட்டு தலைவராக முடியாது எனவும், தனது கொள்கை என்னவென்று முதலில் சொல்ல சொல்லுங்கள் என கேள்வி எழுப்பினார்.

அதே போன்று பூநூல் அறுப்பு சம்பவம் குறித்த கேள்விக்கு பூநூலை பிராமணர்கள் மட்டும் அணிவதில்லை ஆசாரி, விஸ்வகர்மா, செட்டியார், வட மாவட்டங்களில் ஆவணி அவிட்டத்திற்கு வன்னியர்கள் பூநூல் போடுகிறார்கள் அதனால் பூநூல் அறுக்கும் கும்பல் பூநூலை அறுக்க போய் அடிவாங்கி விடாதிர்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

What do you think?

வேதாரண்யம் அடுத்த தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு

திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கைது – காவல்துறை ஆஜாக்கிரதையால் சிறையில் அடைக்க முடியவில்லை