BJP மம்தா உருவ பொம்மை எரிக்க முயற்சி
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற கூட்டு பலாத்காரத்தை கண்டித்தும், இது தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத அம்மாநில முதலமைச்சர் மம்தாமானர்ஜியை கண்டித்து புதுச்சேரி மாநில பாஜக மகளிர் அணி சார்பில் மாநில தலைவி ஜெயந்தி சர்மா தலைமையில் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜா தியேட்டர் சிக்னலில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சம்பா கோவில் அருகே வந்த போது போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர்.
அப்போது மம்தா பானர்ஜிக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய மகளிர் அணியினர் திடீரென தாங்கள் கொண்டு வந்த மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உருவபடத்தை கிழித்து எறிந்தும், செருப்பால் அடித்தும், தீயிட்டு கொளுத்தியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த மம்தாவின் உருவபொம்மையை எரிக்க முயன்ற போது போலீசார் தடுக்க முயன்றபோது இருவருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.