in

இந்து மக்கள் கட்சியை புறக்கணித்த பாஜக, நாகை தொகுதி வேட்பாளருக்கு ஆதரவு கிடையாது


Watch – YouTube Click

இந்து மக்கள் கட்சியை புறக்கணித்த பாஜக, நாகை தொகுதி வேட்பாளருக்கு ஆதரவு கிடையாது

 

நாகை நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் போட்டியிடுகிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவோம் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவித்து இருந்தார்.

ஆனால் இந்து மக்கள் கட்சிக்கு எந்தவித மரியாதையும் கொடுக்கவில்லை என்று நாகை மாவட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்து மக்கள் கட்சியின் நாகை மாவட்ட செயற்குழு கூட்டம் நாகை வெளிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ் மற்றும் பாஜகவினர் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் புகைப்படம், மற்றும் கொடியை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், பாராளுமன்ற தேர்தலில் பாஜக- வுக்கு ஆதரவு கிடையாது என்றும், பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் பணிகளை செய்யமாட்டோம் என்றும் முடிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து மக்கள் கட்சி நாகை மாவட்ட தலைவர் விஜயேந்திரன் கூறுகையில் ; நாகை தொகுதி பாஜக வேட்பாளர் ரமேசை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மாட்டோம் என்றும், நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளை புறக்கணிப்போம் என்றும் கூறினார்.

நேற்றையதினம் அண்ணாமலை பங்கேற்ற பிரச்சார நிகழ்ச்சிக்கும் அழைப்பில்லை புகார் தெரிவித்த அவர், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் அவரவர்கள் விருப்பமுள்ள கட்சிகளுக்கு வாக்களிக்கலாம் என்றும் அறிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

அதிமுக ஆரணி நாடாளுமன்ற வேட்பாளர் சேத்துப்பட்டில் தீவிரவாக்கு சேகரிப்பு

வாய்க்கால் கட்டும் பணியும் போது மின் துறையின் சுற்று சுவர் இடிந்து விழுந்து தமிழக தொழிலாளர் 3 பேர் பலி..