முதலமைச்சரை மாற்றம் செய்து ஆட்சி மாற்றத்தை பாஜக கொண்டுவரும்
புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தமிழ் வேந்தனை ஆதரித்து, அதிமுக மாநில செயலாளர் காலாப்பட்டு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தும் ஒரு சோதனை எலியாக புதுச்சேரி மாநிலம் உள்ளது.
கடந்த 2008-ல் காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சராக இருந்த ரங்கசாமியை மாற்றம் செய்ய தற்போதைய பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தான் காரணம் என்றும், அப்போது அவருக்கு துணை நின்றது அதிமுக மட்டுமே.
நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் நமச்சிவாயம் வெற்றி பெற்றால் பத்து தினங்களுக்குள் முதலமைச்சரை மாற்றம் செய்து ஆட்சி மாற்றத்தை பாஜக கொண்டுவரும். இதை என்.ஆர்.காங்கிரசின் தொண்டர்கள் உணர்ந்து பாஜகவுக்கு வாக்களிக்காமல் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
மீண்டும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்கும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், புதுச்சேரி மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான மாநில அந்தஸ்து, மத்திய நிதிக்குழுவில் சேர்ப்பது, துறைமுக அபிவிருத்தி திட்டம் கொண்டுவருவது, விமான நிலைய விரிவாக்கம் ஏற்படுத்துவது, மூடி இருக்கும் பஞ்சாலைகளை திறப்பதற்கு மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவது உள்ளிட்ட எதையாவது இவர் செய்துள்ளாரா? என்பதை உணர்ந்து இளைஞரான சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள மீனவ குடும்பத்தை சேர்ந்த கழக வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.