in

பாஜகவின் நோக்கம் தமிழகத்தில் முதலில் அதிமுகவை திமுகவை அழிக்க வேண்டும் – தமீமுன் அன்சாரி

பாஜகவின் நோக்கம் தமிழகத்தில் முதலில் அதிமுகவை திமுகவை அழிக்க வேண்டும் – தமீமுன் அன்சாரி

 

பாஜகவின் நோக்கம் தமிழகத்தில் முதலில் அதிமுகவை அழிக்க வேண்டும் பிறகு திமுகவை அழிக்க வேண்டும் என்பதுதான் ஆனால் திமுகவை அசைக்க முடியவில்லை அதிமுக தலைமையின் பலவீனத்தை பயன்படுத்தி அதை அழிக்க பாஜக நினைக்கிறது திராவிட கட்சி வீழ்ச்சியை நோக்கி செல்வதை விரும்பவில்லை என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி தெரிவித்தார்.

தஞ்சையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நடந்த இப்தார் நோம்பு நிகழ்வில், கலந்துக்கொண்ட அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் அ.தி.மு.க.,வுடன் உறவாடி பலவீனப்படுத்த வேண்டும் என பா.ஜ., நீண்ட கால திட்டமாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலிலதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.,வை அழித்து விட்டு, அந்த இடத்திற்கு வர வேண்டும் என பா.ஜ.,கங்கணம் காட்டிக்கொண்டு செயல்படுகிறது. இதனால் அ.தி.மு.க., எவ்வளவு பெரிய பாதிப்பை சந்தித்து என அந்த தலைவர்களுக்கு தெரியும். இது தெரிந்தும் மீண்டும் பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கூட்டணி சேர்ந்தால், அ.தி.மு.க., தொண்டர்களின் மனநிலைக்கு எதிராகும்.

தேர்தலுக்கு ஒராண்டு இருக்கும் நிலையில், அவரசமாக இ.பி.எஸ்., டில்லிக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏன் ஏற்பட்டது என தெரியவில்லை. தமிழகத்தில், நடிகர் விஜயின் அரசியல் வரவால், இரண்டாவது இடத்தில் யார் வருவது என்ற போட்டி நிலவதாக பலரும் கூறி வருகிறார்கள்.

தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், ரகசியமாக இ.பி.எஸ்., டில்லி சென்றது ஆச்சரியமாக உள்ளது. டில்லியில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தை திறக்க போகாதவர், அலுவலகத்தை பார்க்க சென்றேன் என கூறியது, முரண்பாடாக இருந்தது. அமிஷ்தா சந்திப்பை வெளிப்படையாக சொல்லாமல் இ.பி.எஸ்., சென்ற அரசியல் நகர்வு, அ.தி.மு.க.,வுக்கு சிறப்பு சேர்க்கவில்லை. பா.ஜ. மகாராஷ்டரா மாநிலத்தில் சிவசேன கட்சியுடன் உறவாடி, பலவீனப்படுத்தி, பிளவுப்படுத்தி எல்லோருக்கும் தெரியும். பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., செல்வது அவர்களின் கட்சிக்கு மட்டுமில்லை, தமிழகத்திற்கும் நல்லது அல்ல என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். அ.தி.மு.க., தொண்டர்களை நினைத்து கவலைப்படுகிறேன்.

பா.ஜ.,வின் நோக்கம் தமிழகத்தில் முதலில் அ.தி.மு.க.,வை அழிக்க வேண்டும். பிறகு தி.மு.க., அழிக்க வேண்டும் என்பது தான். ஆனால், தி.மு.க.,வை அசைக்க முடியவில்லை. அ.தி.மு.க., தலைமையின் பலவீனத்தை பயன்படுத்தி அதை அழிக்க பா.ஜ.,நினைக்கிறது. திராவிட கட்சி வீழ்ச்சியை நோக்கி செல்வதை விரும்பவில்லை.

தி.மு.க., ஆட்சியில் இருக்க வேண்டும். அ.தி.மு.க., எதிர்கட்சியாக இருக்க வேண்டும் என்பது தான் விருப்பம். அமிஷ்தாவின் பேச்சு ஆணவத்தமான, சர்வாதிகார பேச்சு.இதை வண்மையாக கண்டிக்கிறோம்.இது பா.ஜ.,வை தவிர அதிகாரத்தில் இருக்க கூடாது, ஜனநாயகத்தை சீர்குலைக்க நினைக்கீறார்களா. இது வடமாநிலங்களில் நடைபெறலாம். தமிழகத்தில் இது நடக்காது. தமிழர்கள் தெளிவாக உள்ளனர். பா.ஜ.,வின் சூழ்ச்சி ஒரு போதும் எடுபடாது இவ்வாறு அவர் கூறினார்.

What do you think?

நாகையில் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருடும் மர்ம நபர்

மறைந்த கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி நேரில் அஞ்சலி