அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி வீடுகளில் கருப்பு கொடி
கரூர் மேலப்பாளையம் அருகே அமைந்துள்ள குமரன் குடில் மற்றும் குமரன் லேஅவுட் பகுதி பொதுமக்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணிப்பு போராட்டம்.
கரூர் மாவட்டம் மேலப்பாளையம் பஞ்சாயத்து வடக்கு பாளையம் கிராமத்தில் உள்ள குமரன் குடில் மற்றும் குமரன் லேஅவுட் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
அப் பகுதியில் பல ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை என்று கூறி இதனை கண்டித்து தேர்தலை புறக்கணித்து பேனர் வைத்தும், வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக எங்கள் பகுதிக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி, தார் சாலை வசதி, பொது இடத்தில் சிறிய கோவில் கட்டிக் கொள்ள அனுமதி, தினசரி துப்புரவு பணியாளர் வருகை உள்ளிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில்: அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சட்டமன்ற உறுப்பினர் முதல் கவுன்சிலர் வரை தங்கள் பகுதிக்கு வந்து கொடுத்த வாக்குறுதி என்ன ஆச்சு.
தங்கள் பகுதியில் அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிக்கை என்ன ஆச்சு பல்வேறு அடிப்படை வசதிகள் எங்கள் பகுதியில் நிறைவேற்றவில்லை எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.